tamilnadu

img

தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி

இந்தியா - தென்கொரியா மகளிர் ஹாக்கி அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.


இருதரப்பு போட்டிகளுக்கான சுற்றுப்பயணமாக தென்கொரியா நாட்டிற்கு சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று துவங்கிய முதல் போட்டியின் 20வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமியும், 40வது நிமிடத்தில் நவனீத் கவுரும் தலா ஒரு கோல்களை அடித்தனர். பின்பு தென்கொரியாவின் சின் யேஜேயோங் 48வது நிமிடத்தில் அந்த அணிக்காக ஒரு கோலை அடித்தார். பின்பு ஆட்டநேர இறுதிவரை தென்கொரியாவால் கோல் எதையும் அடிக்க முடியவில்லை.


இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


;